வேலகவுண்டம்பட்டி அருகே முதியவர் கிணற்றில் விழுந்து பலி.

X
Paramathi Velur King 24x7 |29 Sept 2024 8:16 PM ISTவேலகவுண்டம்பட்டி அருகே முதியவர் கிணற்றில் விழுந்து பாலியானது குறித்து போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர், செப்.29- நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர், கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (94). இவர் நேற்று காலை 100 நாள் வேலைக்கு இளநகர் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் சாலை ஓரத்தில் உள்ள புல் மற்றும் முட்களை வெட்டுவதற்காக அங்கு சாலை ஓரத்தில் உள்ள கிணற்றுக்கு அருகே இருந்த மரம் ஒன்றில் குச்சி வெட்டியுள்ளார். அப்போது நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். இதை பார்த்த அவருடன் 100 வேலைக்கு வந்தவர்கள் உடணடியாக நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் கிணற்றில் இறங்கி அங்கு இறந்து கிடந்த நிலையில் ராமசாமியை மீட்டு வேலகவுண்டம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
