இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
முகாம்
கள்ளக்குறிச்சி ராஜு இருதயம் - தோல் மருத்துவமனையில் ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இலவச பரிசோதனை முகாம் நடந்தது. உலக இருதய தினத்தை முன்னிட்டு நடந்த முகாமிற்கு, தலைமை மருத்துவர் இருதய சிகிச்சை நிபுணர் பாபு சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். முகாமில், இருதய பாதிப்புகளின் அறிகுறிகள், சிகிச்சை முறைகள், அறுவை சிகிச்சைக்குப்பின் வாழ்க்கை முறை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.மருத்துவமனை தோல் சிகிச்சை நிபுணர் இந்துபாலா வரவேற்றார். சிறப்பு மருத்துவர்கள் வைகுந்த்கண்ணா, சங்கீதா, பால் ஆகியோர் சிகிச்சை மேற்கொண்டனர். முகாமில் இ.சி.ஜி., எக்கோ, ரத்தம், சிறுநீரக பாதுகாப்பு என 5000 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசோதனை 50க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக செய்யப்பட்டது. மேலும், மருத்துவமனையில் அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து விளக்கினர். ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாக மேலாளர்கள் பிரேமா, மதி ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story