துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்

கொண்டாட்டத்தில் திமுக வினர்.
திருப்பூர் வடக்கு மாவட்டம் பொங்கலுர் மேற்கு ஒன்றியம் பொங்கலுரில் இளைஞர் அணி சார்பில் கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழக துணை முதலமைச்சராக அறிவிக்கபட்டதை முன்னிட்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கியும் மற்றும் துணை முதலமைச்சராக அறிவித்த கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் ஒன்றிய கழக செயலாளர் அசோகன் மற்றும் மாவட்ட கழக துணை செயலாளர் மற்றும் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் ,விவசாய தொழிலாளர் அணி,தகவல் தொழில்நுட்ப அணி,ஓட்டுநர் அணி நிர்வாகிகள்,கிளை கழக நிர்வாகிகள் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மாணவர் அணி தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story