கடைகளை அகற்றிய போது வியாபாரிகளுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம்

கடைகளை அகற்றிய போது வியாபாரிகளுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம்
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட்டில் கடைகளை அகற்றிய போது வியாபாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சார்பில் வடகிழக்கு பருவ மழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சாக்கடை கால்வாயில் தேங்கிய மணல், கழிவுகளை அகற்றி வரப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கை பேருந்து நிலையம் முன் பகுதியில் கால்வாய் துார்வாரும் பணி நடைபெற்றது. அப்போது கால்வாயின் மேற்பரப்பில் இருந்த தள்ளுவண்டி கடைகளை காவல் ஆய்வாளர் அன்னராஜா, சார்பு ஆய்வாளர் சண்முக பிரியா ஆகியோர் உதவியுடன் நகராட்சி ஊழியர்கள் கடைகளை அகற்றினர். இதில் வியாபாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இச்சம்பவத்தை கண்டித்து வியாபாரிகள் பேருந்து நிலையம் முன் மறியலில் ஈடுபட முயன்றனர். இருப்பினும் நகராட்சி ஊழியர்கள் கடைகள் அப்புறப்படுத்தப்பட்ட பின் கால்வாய் கழிவுகளை அகற்றினர்.
Next Story