கரூரில் பத்து நிமிடம் மட்டும் பெய்த திடீர் மழை.பொதுமக்கள் ஆச்சரியம்.

கரூரில் பத்து நிமிடம் மட்டும் பெய்த திடீர் மழை.பொதுமக்கள் ஆச்சரியம்.
கரூரில் பத்து நிமிடம் மட்டும் பெய்த திடீர் மழை.பொதுமக்கள் ஆச்சரியம். தமிழக உள் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் தொடர்ந்து சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்தது. ஆயினும் கரூர் மாவட்டத்தில் கோடை வெயிலை விட அதிக வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இதனிடையே இன்று சற்று முன்பு கரூர் நகரப் பகுதிகளில் திடீரென தோன்றிய கருமேகங்கள், திடீர் மழையாக வேகமாக பெய்தது. பெய்த மழை 10 நிமிடமே நீடித்தது. மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. கரூர் நகரப் பகுதிகளான தாந்தோணி மலை, காளியப்பனூர், மில்கேட் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் என மழை பெய்து மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிகழ்வு பொது மக்களை ஆச்சரியப்பட வைத்தது.
Next Story