வெள்ளகோவில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

X
வெள்ளகோவில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமுத்து மூலனூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து சோதனை செய்து போது அவரிடம் 50 கிராம் கஞ்சாயிருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த சந்திர மாந்தா தாஸ் (வயது 21) என்பதும் வெள்ளகோவில் ஒரு மீன் கடையில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் சந்திரமந்தா தாசை கைது செய்து. அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story

