பத்தாயிரம் பனைமர விதைகள் நடும் விழா

பத்தாயிரம் பனைமர விதைகள் நடும் விழா

பத்தாயிரம் பனைமர விதைகள் நடும் விழா

உத்திரமேரூர் அருகே லா.எண்டத்தூர் ஏரிக்கரை கண்மாய் பகுதியில், சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், ஊராட்சி நிர்வாகத்துடன் தன்னார்வல்கள் இணைந்து, பத்தாயிரம் பனைமர விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது‌.





காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த லா. எண்டத்தூர் கிராம ஏரிக்கரை கண்மாய் ஓரங்களில், சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், லா.எண்டத்தூர் ஊராட்சி மகாத்மா காந்தி தேசிய ஊரக நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களுடன், ஆட்களுடன், டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் நண்பர்கள் நற்பணி மன்ற தன்னார்வலர்கள் இணைந்து, 10.000 பனை மர விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் நண்பர்கள் நற்பணி மன்றத்தினர், நீர் நிலை பகுதிகளை பாதுகாக்கும் வகையில், இந்த ஆண்டு 25, ஆயிரம் பனை விதைகள் நட முடிவு செய்த நிலையில், இன்று இரண்டாம் கட்டமாக 10,000 பனை விதைகள் லா.எண்டத்தூர் ஏரிக்கரை கண்மாய் ஓரங்களில் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக லா.எண்டத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் யமுனா குப்புசாமி கலந்து கொண்டு பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பனைமர விதைகள் நடவு செய்தார். இதில், ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜலட்சுமி, ஊராட்சி செயலர் நாராயணமூர்த்தி, சமூக ஆர்வலர் சோழன் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை நூறு நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மற்றும் டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பனைமர விதைகள் நடவு செய்தனர்.

Next Story