கரூர் மாவட்டம் அறிமுகம். கல்லூரி மாணவ- மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கரூர் மாவட்டம் அறிமுகம். கல்லூரி மாணவ- மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கரூர் மாவட்டம் அறிமுகம். கல்லூரி மாணவ- மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்த தற்போதைய கரூர் மாவட்டம் 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் நாள் ஒருங்கிணைந்த மாவட்டத்திலிருந்து கரூர் மாவட்டம் என தனியாக பிரித்து தமிழக அரசு அறிவிப்பு செய்தது. கரூர் மாவட்டம் அறிவிப்பை தொடர்ந்து இன்று 29 ஆண்டுகள் முடிந்து 30 ஆம் ஆண்டு துவங்கியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாகவும் ,கரூர் மக்களிடையே கரூர் மாவட்டம் துவங்கிய நிகழ்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கரூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்று துறை மாணவ - மாணவியர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியானது, கரூர் அரசு கலைக்கல்லூரியில் இருந்து துவங்கி மில்கேட் வரை சென்று மீண்டும் கரூர் அரசு கலைக் கல்லூரியில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ- மாணவியர், கரூர் மாவட்டம் துவக்கப்பட்ட நிகழ்வு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவாறு பேரணியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் வரலாற்றுத் துறை தலைவர் செல்வகுமார், வரலாற்றுத் துறையில் பணியாற்றக்கூடிய அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை சிறப்பித்தனர்.
Next Story