பி. ஜி.பி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா.
Namakkal (Off) King 24x7 |30 Sep 2024 8:08 AM GMT
நாமக்கல் பி.ஜி.பி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கான தொடக்க விழா நடந்தது. கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் அருகில் தாளாளர் கணபதி கல்லூரி முதல்வர் டாக்டர் கவிதா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
பி. ஜி.பி கல்லூரி குழுமத்தின் தலைவர் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி துணைத்தலைவர் விசாலாட்சி பெரியசாமி முதன்மையர் டாக்டர் பெரியசாமி தாளாளர் கணபதி மற்றும் பொருளாளர் மீனாட்சி சுந்தரம் சிறப்பாளர்களாக பங்கேற்றனர். விழாவில் முதலாம் ஆண்டு மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர். விழாவில் பேசியவர்கள் மாணவர்கள் தங்களின் திறமைகளை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் ஒழுக்க நெறிகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் பாடங்களை எவ்வாறு தவறாமல் படிக்க வேண்டும் என்பன குறித்து அறிவுரை வழங்கினர். கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களுக்கு காணொளி காட்சி வாயிலாக அறிவுரை வழங்கினர். விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் டாக்டர் கவிதா துணை முதல்வர் டாக்டர் நிர்மல் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story