கால்வாய் பாசனத்தால் பூலாம்பட்டி பகுதிகளில் நெல் நடவு பணிகள் துவக்கம்
Edappadi King 24x7 |30 Sep 2024 10:46 AM GMT
சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் பூலாம்பட்டி நெடுங்குளம் கோனேரிப்பட்டி ஆகிய பகுதிகளில் நெல் நடவு பணி தீவிரம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து விவசாயம் செய்வதற்காக எடப்பாடி,குள்ளம்பட்டி, தேவூர்,குமாரபாளையம், பள்ளிபாளையம் வழியாக கிழக்குக்கரை கால்வாய் மூலம் பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை கிழக்குக்கரை கால்வாயில் விவசாயத்திற்காக நான்கு மாதங்களுக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த நீரை கொண்டு எடப்பாடி வட்டாரத்திற்கு உட்பட்ட கூடக்கல்,பூலாம்பட்டி நெடுங்குளம், சிலுவம்பாளையம் மற்றும் தேவூர் வட்டாரத்திற்கு உட்பட்ட கல்வடங்கம், காவேரிப்பட்டி, குள்ளம்பட்டி, செட்டியபட்டி தேவூர் புல்லாக்கவுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் தற்போது மேட்டூர் அணையில் இருந்து கிழக்குகரை கால்வாயில் திறக்கப்பட்டுள்ள நீரை கொண்டு விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர். எடப்பாடி வட்டாரத்தில் 3 ஆயிரம் ஏக்கர் மற்றும் தேவூர் வட்டாரத்தில் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது எடப்பாடி மற்றும் தேவூர் வட்டாரத்தில் மொத்தம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு பணி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
Next Story