மீனாட்சி வலசில் நிறுத்தி இருந்த லாரியின் பின்னால் டூவீலர் மோதி இளைஞன் உயிரிழப்பு.

மீனாட்சி வலசில் நிறுத்தி இருந்த லாரியின் பின்னால் டூவீலர் மோதி இளைஞன் உயிரிழப்பு.
மீனாட்சி வலசில் நிறுத்தி இருந்த லாரியின் பின்னால் டூவீலர் மோதி இளைஞன் உயிரிழப்பு. நாமக்கல் மாவட்டம், மோகனூர், அண்ணல்நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் மகன் தனுஷ் வயது 19. இவர் செப்டம்பர் 29ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில், கோவை - கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் மீனாட்சி வலசு மித்ரா தோட்டத்தின் எதிரே சென்றபோது, கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, காளியாளம்பட்டி அருகே சுக்காம்பட்டியை சேர்ந்த சந்தோஷ் குமார் அவரது லாரியை சாலையோரம் எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் நிறுத்தி இருந்தார். இதனால் தனுஷ் ஒட்டி வந்த டூவீலர் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த தனுஷின் தாயார் சசிகலா வயது 42 என்பவர் அதிர்ச்சி அடைந்ததோடு, இது குறித்து காவல்துறையினருக்கும் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த சந்தோஷ்குமார் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சாலையோரம் எவ்வித பாதுகாப்பு அறிவிப்பு செய்யாத நிலையில் லாரியை நிறுத்தி, விபத்து ஏற்பட காரணமான சந்தோஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல்துறையினர்.
Next Story