விக்கிரமங்கலம் அருகே முருகன் கல் சிலை கண்டெடுப்பு
Sholavandan King 24x7 |30 Sep 2024 1:39 PM GMT
வீட்டிற்கு வானம் தோன்டிய போது முருகன் கல் சிலை கண்டெடுக்கப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தில் உள்ள ஆனந்தன் என்பவருடைய இடத்தில் வீடு கட்டுவதற்காக வானம் தோண்டி உள்ளனர். அப்பொழுது கடப்பாரை கம்பியில் ஏதோ சாமி சிலை இருப்பது தெரிந்தது அதனை வெளியே எடுத்துப் பார்த்தபோது சுமார் ஒன்றரை அடி முருகன் கல் சிலை என்று தெரிந்தது.தகவல் தெரிந்து அக்கிராம மக்கள் அங்கு கூடினர். பின்னர்அந்த சிலையை தண்ணீரால் அபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து பூ வைத்து சூடம் கொளுத்தி அனைவரும் வணங்கினர். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சப்இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்து கண்டெடுக்கப்பட்ட முருகன் கல் சிலையை உசிலம்பட்டி துணை வட்டாட்சியர் மணிமேகலையிடம் ஒப்படைத்தனர். விக்கிரமங்கலம் அருகே வீட்டிற்கு வானம் தோன்டிய போது முருகன் கல் சிலை கண்டெடுக்கப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story