பரமத்தி வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.

X
Paramathi Velur King 24x7 |30 Sept 2024 8:01 PM ISTபரமத்திவேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
பரமத்திவேலூர், செப்.30- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, வேலூர் மற்றும் பரமத்தி பேரூராட்சிகள், நல்லூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியோர் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் பரமத்தியில் நடைபெற்றது. இலவச மருத்துவ முகாமிற்கு பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி, துணைத் தலைவர் ரமேஷ்பாபு மற்றும் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சோமசுந்தரம், பரமத்தி பேரூராட்சி செயல் அலுவலர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ முகாமில் வேலூர் மற்றும் பரமத்தி பேரூராட்சிகள் பணியாற்றும் 100- க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் பரமத்தி வேலூர் பேரூராட்சி இளநிலை உதவியாளர் அண்ணாதுரை, வார்டு உறுப்பினர்கள், வேலூர் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள் வெங்கடேசன் மற்றும் ஜனார்த்தனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
