தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற மூன்று கடைகளுக்கு சீல்
Virudhachalam King 24x7 |30 Sep 2024 5:23 PM GMT
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி
விருத்தாசலம் நகராட்சி பெரியார் நகர், பெரிய கண்டியங்குப்பம், கோ. பொன்னேரி ஆகிய இடங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நல்லதம்பி, சுப்பிரமணியன், பாலாஜி ஆகியோர் கொண்ட குழுவினர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற மூன்று கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. முதல்முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பது கண்டறியப்பட்டால் 15 நாட்கள் கடையை மூடுவதும், 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் ஒரு மாதம் கடையை மூடுவதும் 50,000 அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை செய்யப்பட்டால் நிரந்தரமாக கடை மூடப்படும். ஒரு லட்ச ரூபாய் அபராத விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. எனவே, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை வேண்டாம் என உணவு பாதுகாப்பு துறையினர் ஒவ்வொரு கடையாக சென்று எச்சரிக்கை விடுத்தனர்.
Next Story