தொழிலாளிக்கு குத்து : முன்னாள் திமுக எம்எல்ஏ மகன் கைது
Nagercoil King 24x7 |30 Sep 2024 11:54 PM GMT
தக்கலை அருகே
குமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜாண் கென்னடி (43). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. சம்பவ தினம் இவர் குமாரபுரத்தில் இருந்து தனது வாகனத்தில் வீடு சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் ஜாண் கென்னடியை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர். பின்னர் கத்தியால் அவரது வயிற்றில் குத்தி விட்டு தப்பி சென்றனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். இதில் ஜாண் கென்னடியை குத்திவிட்டு தப்பி ஓடியது பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் திமுக எம் எல் ஏ தியோடர் ரெஜினால்டு மகன் ஆனந்த் பிலிசிங் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கொற்றிகோடு போலீசார் நேற்று இரவு அவரை கைது செய்தனர். சம்பவம் நடந்து 100 நாட்களுக்கு பிறகு முன்னாள் எம்எல்ஏ மகனை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story