மோட்டூர் ஆற்றங்கரையில் இரண்டு வயது குழந்தை தவறி விழுந்து பலி.

மோட்டூர் ஆற்றங்கரையில் இரண்டு வயது குழந்தை தவறி விழுந்து பலி.
ஆரணி, அக்.1ஆரணி அடுத்த மோட்டூர் கிராமத்தில் உள்ள செய்யாற்றில் இரண்டு வயது குழந்தை தவறி விழுந்து இறந்தது.
ஆரணி அடுத்த மோட்டூர் கிராமத்தில் உள்ள செய்யாற்றில் இரண்டு வயது குழந்தை தவறி விழுந்து இறந்தது. போளூர் வட்டம், பாடகம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், ஆனந்தி தம்பதியருக்கு மகன் தர்ஷன்(4), மகள் ஹாஸினி(2) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் செல்வராஜ், ஆனந்தி ஆகியோர் சேலத்திற்கு சென்று கட்டிட வேலை செய்து வருகின்றனர். இதனால் குழந்தை ஹாசினியை ஆரணி அடுத்த மோட்டூரில் உள்ள தாத்தா ஏழுமலை, பாட்டி லட்சுமி அவர்களிடம் ஒப்படைத்து சென்றுள்ளனர். இதனால் ஹாசினி தாத்தா, பாட்டி அரவணைப்பில் இருந்து வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை தாத்தாவும், பாட்டியும் நிலத்தில் குழந்தையை தனியாக விட்டு களை பறித்துக்கொண்டிருந்தனர்.அப்போது குழந்தை அருகில் உள்ள செய்யாற்றங்கரையில் இறங்கியுள்ளது. அங்கு தண்ணீர் தேங்கி இருந்ததில் இறங்கி தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கி இறந்துள்ளது. இந்நிலையில் குழந்தையை காணவில்லை என்று தாத்தாவும், பாட்டியும் தேடி பார்த்தனர். மேலும் அப்பகுதி மக்கள் தேடிப்பார்த்தபோது குழந்தை ஆற்றில் விழுந்து இறந்ததுகிடந்ததை பார்த்தனர். பின்னர் குழந்தையை மீட்டனர். ஆரணி கிராமிய போலீஸார் தகவறிந்து சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story