உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்பு வெள்ளகோவில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
துணை முதல் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். இதை அடுத்து வெள்ளகோவில் ஒன்றிய நகர திமுகவினர் நகர செயலாளர் சபரி எஸ். முருகானந்தன் தலைமையில் கடைவீதி, நான்கு ரோடு சந்திப்பில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் நகர அவைத் தலைவர் குமரவேல், ஒன்றிய அவைத்தலைவர் தண்டபாணி, பிஏபி பாசன சபை தலைவர் தங்கமுத்து, ஒன்றிய குழு உறுப்பினர் லோகு @ லோகநாதன், மாவட்ட கலை இலக்கியப் பேரவை துணைத் தலைவர் அரவிந்த், வழக்கறிஞர் வாசுதேவன், நகரத் துணைச் செயலாளர் நந்தகோபால், அருள்மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story