நாமக்கல்: மேட்டுப்பட்டி சிவன் கோயிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசய நிகழ்வு ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
Namakkal King 24x7 |1 Oct 2024 6:03 AM GMT
புரட்டாசி திங்கள்கிழமை நேற்று மற்றும் இன்று செவ்வாய்கிழமை காலை 6.20 முதல் 6.35 வரையில் பதினைந்து நிமிடம் சூரியஒளி சிவலிங்கம் மீது விழுந்தது.
நாமக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டியில் உள்ள சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேசுவரா் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு பிரதோஷம், சிவராத்திரி மற்றும் இதர விழாக் காலங்களில் ஏராளமான பக்தா்கள் வருகை புரிவா். ஒவ்வோா் ஆண்டும் புரட்டாசி மாதம் 14, 15, 16 தேதியிலும் அதே போன்று மாசி மாதம் 27, 28, 29 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நேரடியாக கோயில் பிரகாரத்தில் உள்ள நந்தி மீதும், அடுத்து உள்பிரகாரத்தில் உள்ள சிறிய நந்தி மீதும், கருவறையில் உள்ள லிங்கத்தின் மீதும் விழும் அதிசய நிகழ்வு நடைபெறும். அதன்படி நிகழாண்டு புரட்டாசி திங்கள்கிழமை நேற்று மற்றும் இன்றும் செவ்வாய்கிழமை காலை 6.20 முதல் 6.35 வரையில் பதினைந்து நிமிடம் சூரியஒளி சிவலிங்கம் மீது விழுந்தது. அதன்பிறகு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெற்றது. பின் பூக்களால் அர்ச்சனை,பஞ்ச தீபம் உட்பட மஹா தீபம் காண்பிக்கப்பட்டதுஇதில்ஏராளமான பக்தா்கள் அதிசய நிகழ்வினை பக்தியுடன் வழிபாடு மேற்கொண்டனா்.
Next Story