துணை முதல்வர், அமைச்சர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தி அன்னதானம் வழங்கிய முன்னாள் எம் எல் ஏ காமராஜ்
Karur King 24x7 |1 Oct 2024 6:09 AM GMT
துணை முதல்வர், அமைச்சர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தி அன்னதானம் வழங்கிய முன்னாள் எம் எல் ஏ காமராஜ்
துணை முதல்வர், அமைச்சர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தி அன்னதானம் வழங்கிய முன்னாள் எம் எல் ஏ காமராஜ் தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின், மீண்டும் தமிழக மின்சார மற்றும் ஆய தீர்வைத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட செந்தில் பாலாஜி ஆகியோர் தங்கள் பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று கரூர் எல் என் எஸ் சமுத்திரம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடத்தி, அன்னதானம் வழங்கினார் முன்னாள் கிருஷ்ணராயபுரம் எம் எல் ஏ காமராஜ். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகர மேற்கு பகுதி கழக செயலாளர் ஜோதிபாசு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார். மேலும் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பிரின்சி மாநகர செயலாளர் அரவிந்த் 28 வது வார்டு கவுன்சிலர் மணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மனம் உருகி பிரார்த்தனை செய்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
Next Story