வெயிலின் தாக்கம் காரணமாக பண்ணாரியம்மன் கோவிலில் நகரும் நிழற்குடைகள்-தரைக்கம்பளம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் ஏற்பாடு
Bhavanisagar King 24x7 |1 Oct 2024 8:13 AM GMT
வெயிலின் தாக்கம் காரணமாக பண்ணாரியம்மன் கோவிலில் நகரும் நிழற்குடைகள்-தரைக்கம்பளம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் ஏற்பாடு
வெயிலின் தாக்கம் காரணமாக பண்ணாரியம்மன் கோவிலில் நகரும் நிழற்குடைகள்-தரைக்கம்பளம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் ஏற்பாடு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கர்நாடகா மாநிலத்தில் ய இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுகிறார்கள்.மேலும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விடுமுறை நாட்களில் பண்ணாரியம்மன் கோவிலுக்கு வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து அம்மனை வழிபட்டு கோவில் வளாகத்தில் உள்ள 2 குண்டத்தில் உப்பு, மிளகு,மஞ்சள், குங்குமம் போட்டுவழிபாடு நடத்தி விட்டுசெல்கிறார்கள்.குறிப்பாக கர்நாடக மாநில எல்லையையொட்டிய பகுதியில் கோவில் அமைந்து உள்ள தால் அந்த மாநில பக்தர்களும் அதிகளவில் வந்து அம்மனை வழிபடு கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் எப்போதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர் உள்பட ஏராளமான வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பவர் கூட்டம் காரணமாக வெயிலில் நிற்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இதை தொடர்ந்து கடந்த சிலநாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் நடந்து செல்வது மற்றும் தரிசனத்துக்கு வருபவர்களும் வெயிலால் சிரமம் அடைந்து வந்தனர். இதையடுத்து பக்தர்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் உப்பு குண்டத்தை சுற்றி தரைக்கம்பளம் விரிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவில்வளாகத்தில் நகரும் நிழற்குடைகளும் நிறுத்தப்பட்டுஉள்ளது. இந்த நிழற்குடைகள்பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் போது அவர்கள் வசதிக்காக பயன்படுத்தப்படும். வெயில் மற்றும் மழை காலங்களில் பக்தர்களின் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் வரவழைக்கப்பட்டு உள்ளது
Next Story