ராசிபுரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..
Rasipuram King 24x7 |1 Oct 2024 11:06 AM GMT
ராசிபுரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பல்வேறு இடங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளை பல்வேறு சமூக அமைப்பினர் ,மற்றும் அவரது ரசிகர்கள், காங்கிரஸ் கட்சியினர் என சிறப்பாக கொண்டாடினர். ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அவரின் 97.வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு, மற்றும் பேருந்து பயணிகளுக்கு என அனைவருக்கும் லட்டுகள் வழங்கி சிறப்பித்தனர். இதேபோல் ராசிபுரம் காந்தி மாளிகை அருகே நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர். மேலும் வெண்ணந்தூர் , நாமகிரிப்பேட்டை, குருசாமிபாளையம் போன்ற இடங்களில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்வில் ஆர்.டி.இளங்கோ,எஸ்.ஆர். சண்முகம், எஸ். காமராஜர், பி. மாதவன், டைலர்,ஏ. தங்கராஜ், எஸ். ஆல்பர்ட், டி .எம்.எஸ். கண்ணன், நடராஜ், மக்கள் நீதி மையம் நகரச் செயலாளர் ரமேஷ், உள்ளிட்ட நிர்வாகிகள் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story