தட்க்கல் திட்டத்தை தாமதப்படுத்தினால் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் - தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் ராஜா கரூரில் பேட்டி.
Karur King 24x7 |1 Oct 2024 11:13 AM GMT
தட்க்கல் திட்டத்தை தாமதப்படுத்தினால் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் - தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் ராஜா கரூரில் பேட்டி.
தட்க்கல் திட்டத்தை தாமதப்படுத்தினால் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் - தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் ராஜா கரூரில் பேட்டி. தமிழக அரசு, விவசாயிகளுக்காக அறிவித்த விரைவான மின் இணைப்பு பெறுவதற்கான தட்க்கல் திட்டத்தை செயல்படுத்தாமல் மூன்று ஆண்டு காலமாக கிடப்பில் போட்டுள்ளது. தட்க்கல் திட்டத்தில் விவசாயிகள் முறையாக 2.5 லட்சம் முதல் மூன்று லட்சம் வரை பணம் செலுத்தி உள்ளனர். 90 நாட்களில் இணைப்பு கொடுப்பதாக கூறி கொடுக்காததால் இன்று மாவட்டம் தோறும் மின்வாரிய பொறியாளரை சந்தித்து மனு அளித்தனர். கரூரில் மின்வாரிய தலைமை பொறியாளரிடம் மனு அளித்த பிறகு, செய்தியாளரிடம் தெரிவித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் ராஜா, தட்கல் திட்டத்தில் மட்டும் 30 ஆயிரம் விவசாயிகள் பணத்தை செலுத்தி விட்டு மின் இணைப்பு பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று ஆண்டுகளாக பணம் செலுத்தியும் மின் இணைப்பு வழங்காததால் விவசாயிகளின் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவாக தட்க்கல் திட்டத்தில் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். தவறினால், விவசாயிகளை ஒன்று திரட்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
Next Story