மின் கம்பத்தை அகற்றாமலேயே சிமெண்ட் சாலை அமைக்கப்பட்ட அவலம்
Palladam King 24x7 |1 Oct 2024 12:13 PM GMT
சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த இடுவாய் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சாலை வசதி அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் இடுவாய் ஊராட்சி சார்பில் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எம்ஜிஆர் நகர் வீதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் மின் கம்பத்தை அகற்றாமலேயே சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வாழும் குடியிருப்பு வாசிகள் சாலையை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் சாலையின் இருபுறத்திலும் மண் எதுவும் கொட்டப்படாததால் வாகனங்களை வீடுகளுக்குள் ஏற்றி இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையின் நடுவே மின்கம்பத்தை அகற்றாமல் கான்கிரிட் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வர முடியாத நிலை உள்ளதாகவும் உடனடியாக மின்கம்பத்தை அகற்றி சாலையின் இருபுறமும் பாதுகாப்பான முறையில் மண் கொட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story