இன்னுயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய தேசிய மாணவர் படையினர்
இன்னுயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய தேசிய மாணவர் படையினர்
ஸ்ரீ சங்கரா அறிவியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய நாட்டின் போரில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு புஷ்பாஞ்சலியும், வீரவணக்கம் செலுத்திய தேசிய மாணவர் படையினர்
உயிர் தியாகம் செய்த முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்திற்கு நலத்திட்டம் வழங்கி கௌரவிக்கபட்டது
மாஹாலய அமாவாசைக்கு முன்னாள் வரும் சதுர்த்தசி திதியில் கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆனது ஆயுதங்களால் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அன்றைய தினத்தில் அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் எண்ணி தர்ப்பணம் செய்தால் அவர்களது ஆன்மா வீர சொர்க்கம் அடையும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சங்கர கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் ராணுவ படை வீரர்கள் நல சங்கம் சார்பில் தேசிய மாணவர் படையினர் உட்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இந்திய நாட்டின் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நினைவு போற்றி புஷ்பாஞ்சலியும் வீர வணக்கமும் செலுத்தினர், இதில் மூத்த ஆலோசகர் கேப்டன் சுப்பிரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மறைந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் கூரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் அவில்தார் ஏகாம்பரம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அசாம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு பணியின் பொழுது வீர மரணம் அடைந்தார், அவரது தியாகத்தை போற்றும் வகையில் அவரது குடும்பத்தாருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் காஞ்சிபுரம் மாவட்டம் முன்னாள் ராணுவப்பட வீரர்கள் கூட்டமைப்பு தலைவர்கள் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இதில் தேசிய மாணவர் படை அலுவலர் தெய்வசிகாமணி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.