புஞ்சைபுளியம்பட்டி அருகே குளத்தில் கழிவுகளை கொட்ட முயற்சி லாரி உரிமையாளருக்கு அபராதம்
Bhavanisagar King 24x7 |1 Oct 2024 1:01 PM GMT
புஞ்சைபுளியம்பட்டி அருகே குளத்தில் கழிவுகளை கொட்ட முயற்சி லாரி உரிமையாளருக்கு அபராதம்
புஞ்சைபுளியம்பட்டி அருகே குளத்தில் கழிவுகளை கொட்ட முயற்சி லாரி உரிமையாளருக்கு அபராதம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள தேசிபாளையம் ஊராட்சி பகுதியில் புங்கம்பள்ளி குளம் உள்ளது. நேற்று ஒரு லாரியில் இருந்த கழிவுகளை சிலர் புங்கம்பள்ளி குளத்தில் 3 கொட்ட முயன்றனர். இதைப்பார்த்த - அந்தப்பகுதி மக்கள் 7 உடனே லாரியை சிறைபிடித்தனர். பின்னர் இதுகுறித்து தேசிபாளையம் 5 ஊராட்சி நிர்வாகத்துக்கும், புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கும் தகவல் - கொடுத்தனர். அதன் பேரில் போலீசாரும், தேசி பாளையம் ஊராட்சி தலைவர் முரளிகுமாரும் அங்கு வந்தனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் லாரி கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்தது என்று தெரியவந்தது. இதையடுத்து லாரி உரிமையாளருக்கு ஊராட்சி சார்பில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story