இராசிபுரத்தில் மேக்னம் நிறுவனம் சார்பில் தொழிலாளர் நலவாரியம் குறித்த பயிற்சி முகாம்
Rasipuram King 24x7 |1 Oct 2024 2:15 PM GMT
இராசிபுரத்தில் மேக்னம் நிறுவனம் சார்பில் தொழிலாளர் நலவாரியம் குறித்த பயிற்சி முகாம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தொழிலாளர் நலவாரியம் குறித்த பயிற்சி முகாம் மற்றும் மது ஒழிப்பு போராளி சசிபெருமாள் அவர்களின் பட திறப்பு விழா நடைபெற்றது. மேக்னம் தொண்டு நிறுவனத்தின் இராசிபுரம் தலைமை அலுவகத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் வாரிய தலைவர் பொன்குமார் அவர்கள் தலைமையில் மேக்னம் நிறுவண பணியாளர்கள் மற்றும் தன்னார்வர்களுக்கு தொழிலாளர் நலவாரியம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் ,கட்டுமான தொழிலாளர்களுக்கான அரசு திட்டங்கள் அதனை எவ்வாறு அடிதட்டு மக்களுக்கு கொண்டு செல்லுவது குறித்து விளக்கம் அளித்தார். நிகழ்வில் கவிஞர் நாகலிஙகம்,தொழிற்சங்க கூட்டமைப்பு,மாநில பொது செயலாளர், பாஸ்கரன்,ஜி.எம்.குமார்,ஜெகதீஸ்வரன் ,ஏ.பாலாகிருஸ்னன் ,டிகேஎம்எஸ் மாநில இணை பொது செயாலாளர் கலந்து கொண்டனர். விழாவில் மதுஒழிப்பு போராளி காந்தியாவதி சசிபெருமாள் அவர்களது உருவபடம் திறந்துவைக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மேக்னம் நிறுவனம் பி.சக்திவேல்,செயலாளர்மேக்னம் நிறுவனம் ச.சத்தியதாஸ்,திட்ட இயக்குனர்,மேக்னம் & பணியாளர்கள் ,தன்னார்வர்கள் என 70 மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர்.
Next Story