ராசிபுரத்தில் இடிக்கப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் குவிந்து கிடக்கும் அரசு ரப்பர் ஸ்டாம்ப்
Rasipuram King 24x7 |1 Oct 2024 2:26 PM GMT
ராசிபுரத்தில் இடிக்கப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் குவிந்து கிடக்கும் அரசு ரப்பர் ஸ்டாம்ப்
இடிக்கப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் குவிந்து கிடக்கும் ரப்பர் ஸ்டாம்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் கடந்த, 1885 ஆம் ஆண்டு சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடம் செங்கல், சுண்ணாம்பு ஆகிய கலவையால் கட்டப்பட்டுள்ளது. சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, 62 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 140 ஆண்டுகள் பழமையான இந்த சார்பதிவாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டுள்ளது. 140 வருடம் பழமையான இந்த கட்டத்தில் சில இடங்களில் கூரையில் மழைநீர் கசியத் தொடங்கியது. இதையடுத்து பழைய கட்டிடத்தை இடித்து விட்டு சுமார், 1.35 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக கடந்த வாரம் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்தது. இந்நிலையில் நேற்று இடிக்கப்பட்ட கட்டிடடத்தின் ஒரு மூலையில் பழைய ரப்பர் ஸ்டாம்புகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டுள்ளனர். ஆவணங்களில் பயன்படுத்தப்படும் பக்கம் எண் கொண்ட ரப்பர்ஸ்டாம்புகள், சார்பதிவாளர் முத்திரை, வட்ட வடிவிலான ரப்பர் ஸ்டாம்புகள் அதிகளவு உள்ளன. பயன்பாட்டில் இல்லாத இந்த ரப்பர் ஸ்டாம்புகளை முறையாக அழிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். சமூக விரோதிகள் கையில் இவைகள் சிக்கினால், பழைய ஆவணங்களை எளிதாக தயார் செய்ய முடியும். எனவே கவனக்குறைவாக இல்லாமல் பழைய ரப்பர் ஸ்டாம்புகளை அழிக்க வேண்டும் என இருகில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story