உதவி பெறும் பள்ளி பள்ளியை மூடுவதாக அறிவித்ததால் பெற்றோர், மாணவியர் சாலை மறியல்
Komarapalayam King 24x7 |1 Oct 2024 2:55 PM GMT
குமாரபாளையம் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று, பள்ளியை மூடுவதாக அறிவித்ததால் பெற்றோர், மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி நிர்வாக காரணத்தால் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் பள்ளி மூடப்படும் என சுற்றறிக்கை ஒட்டியதால், பள்ளி மாணவிகள் தங்கள் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்று தங்கள் பெற்றோருடன் குமாரபாளையத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் சாலை மறியல். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பள்ளி நிர்வாகத்துடனும் பெற்றோர்களுடனும் பேச்சுவார்த்தை. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் முதன்மைச் சாலை பகுதியில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயின்ற பலரும் உயர் அதிகாரிகளாகவும், தனியார் நிறுவனங்களும் நடத்தி வருகின்றனர். பழம் பெருமையான இந்த பள்ளி நிர்வாகம் திடீரென்று நேற்று காலை கடந்த ஒன்பதாம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டதாக கூறி, ஒரு சுற்றறிக்கையை தங்கள் விளம்பர பலகையில் ஒட்டியுள்ளனர். அதில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் 5 முதல் பள்ளி நிர்வாக காரணங்களால் மூடப்படுவதாக அறிவித்திருந்தனர். இதனால் இந்த பள்ளியில் பயிலும் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் தங்கள் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகும் என கருதி தங்கள் பெற்றோர்களுடன் அரசு உதவி பெறும் பள்ளியின் முன்பு குமாரபாளையத்தில் இருந்து சேலம் செல்லும் முக்கிய சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசாரும் வருவாய்த்துறையினரும், பொதுமக்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு காணப்படும், அதுவரை சாலை மறியலை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் . பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சு வார்த்தையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாணவிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தீர்வு காணப்படும் என தெரிவித்ததையடுத்து கலைந்து சென்றனர்.
Next Story