ஆண்டிபட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
Andippatti King 24x7 |1 Oct 2024 3:03 PM GMT
தந்தை பெரியார் குருதி கொடை கழக தலைவர் ஸ்டார். நாகராஜ் கலந்துகொண்டு வாழும் போது குருதிக்கொடை, வாழ்ந்த பின் விழிக்கொடை மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான விழிப்புணர்வு குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளித்து பேசினார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடந்து வருகிறது. 7 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் நேற்று மாணவிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் குருதி கொடை கழக தலைவர் ஸ்டார். நாகராஜ் கலந்துகொண்டு வாழும் போது குருதிக்கொடை, வாழ்ந்த பின் விழிக்கொடை மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான விழிப்புணர்வு குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அமைதி குழு பசுமை தேனி அமைப்பின் நிர்வாகி சர்ச்சில் துரை பேசும் போது, மரம் நடுதலின் அவசியம் சுற்றுச்சூழலை பாதுகாத்தல், வனம் மற்றும் இயற்கையை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து, மாணவிகள் சமூக அக்கறையுடன் விழிப்புணர்வுடன் வாழ வேண்டும் என்று கூறினார். அதனைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் ஆண்டிச்சாமி பேசும்போது, போக்குவரத்து பற்றிய விதிகள் மற்றும் போக்குவரத்தின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் கைபேசி பயன்படுத்துவதில், பேசுவதில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு விளக்கி பேசினார். இதனையடுத்து ஸ்டார் நா. ஜீவா அவர்கள் பேசும்போது ஒழுக்க கல்வி, உடல் ஆரோக்கியம், நல்ல சமுதாயத்தை வளர்க்க மாணவிகள் முன் வர வேண்டும் என்றும் அதற்கு என்.சி.சி மற்றும் என். எஸ்.எஸ் மாணவர்கள் முன் உதாரணமாக விளங்க வேண்டும் என்று பேசினார். இதனைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் ஜெயோசிலி மற்றும் ஆசிரியை ரத்தினம், நாட்டு நல பணித்திட்ட ஆசிரியர் ரேவதி ஆகியோர் முன்னிலையில், மாணவிகள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர் .இந்த கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் நிர்வாகிகள், நாட்டு நலப்பணி திட்ட தொண்டர்கள், மாணவிகள் ஆசிரியர்கள் ,அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story