காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் காந்தி சிலை!
Namakkal King 24x7 |1 Oct 2024 5:36 PM GMT
சிலைக்கு முன்பாக பொதுமக்கள் செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
நாமக்கல் செலம்பகவுண்டர் பூங்காவில் மகாத்மா காந்தி சிலை அமைப்பு குழுவின் சார்பில், மகாத்மா காந்தியின் சிலை புதிதாக கடந்த 2022 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.காந்தி ஜெயந்தி, மற்றும் முக்கிய தினங்களில் காந்தி சிலைக்கு நாமக்கல் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், வாரிசுகள் நலச் சங்கம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நாமக்கல் நகருக்கு வருகை தரும் பொழுது மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.அக்டோபர் -2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி சிலைக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. சிலைக்கு முன்பாக பொதுமக்கள் செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Next Story