விருத்தாசலம் அருகே மன்னம்பாடி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

X
விருத்தாசலம் அருகே உள்ள மன்னம்பாடி ஊராட்சியில் கிராம ஊராட்சி மற்றும் ஈரநிலம் இணைந்து மன்னம்பாடி சின்ன ஏரிக்கரையில் கிராம மக்களோடு மரக்கன்றுகள் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மூக்காயி தலைமை தாங்கினார். ஈரநிலம் நிறுவனர் ஓவியர் தமிழரசன், துணைத் தலைவர் பூவரசி மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் சந்தியா மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராமப் பொதுமக்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டதோடு இந்த ஒவ்வொரு மரக்கன்றுகளையும் எங்கள் குழந்தைகள் போல் பராமரித்து பாதுகாத்து வளர்த்தெடுப்போம் என்று உறுதிமொழி மேற்கொண்டனர்.
Next Story

