விருத்தாசலத்தில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா

X
விருத்தாசலம் கடைவீதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகர் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள் விழா நடந்தது. காங்கிரஸ் கட்சி கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ தலைமை தாங்கி சிவாஜி கணேசன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட பொருளாளர் ராஜன், நகர தலைவர்கள் ரஞ்சித் குமார், வேல்முருகன், ராஜீவ் காந்தி, ரசிகர் மன்ற தலைவர் மணலூர் கண்ணன், வட்டார தலைவர்கள் ராவணன், சாந்தகுமார், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் லாவண்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

