பாதிக்கப்பட்ட பெண்கள் கலெக்டரிடம் புகார்

X
லோன் பணம் செலுத்திய பின்பும் மிரட்டும் தனியார் பைபானஸ் நிறுவனம் மீது கிராம பெண்கள் புகார் மனு அளித்தனர்.இது தொடர்பாக தோட்டப்பாடி, அம்மையகரம், எஸ்.நரையூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;கள்ளக்குறிச்சி அடுத்த தோட்டப்பாடி, அம்மையகரம் கிராமத்தை பெண்கள் பலர் கூலி வேலை செய்து வருகிறோம். கிராமத்தில் ஒரு தனியார் பைனானஸ் நிறுவனம் 10 பேர் கொண்ட மகளிர் குழுவிற்கு லோன் தருவதாக ஆசை வார்த்தை கூறினர். பல குழுக்கள் அமைத்து தனியார் பைபனாஸ் நிறுவனத்தில் கடன் பெற்று நாங்கள் லோன் தவனை பணம் கட்டி வந்த நிலையில், அந்நிறுவன பெண் ஊழியர் அதனை கட்டாமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், லோன் தொகை செலுத்தவில்லை என கூறி எங்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கியில் சென்று கேட்டால் முறையாக பதில் அளிக்கவில்லை. இதற்கிடையே தனியார் பைனாஸ் நிறுவனம் லோன் பணத்தை கட்டுமாறு எங்களை மிரட்டி வருகின்றனர். எனவே இதன் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story

