கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
Nagercoil King 24x7 |2 Oct 2024 5:20 AM GMT
நாகர்கோவிலில்
தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில், டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று ( 1 -ம் தேதி) துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமை வகித்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் வீரர் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்திற்கு உட்பட்ட 95 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள், மேலும் 33 வகை விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பிரின்ஸ் எம்எல்ஏ, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் ராஜேஷ் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story