ஊராட்சிகளை நகராட்சிகளுடன் சேர்க்காமல் - தன்னிசையாக செயல்பட அனுமதிக்க வேண்டும்’

ஊராட்சிகளை நகராட்சிகளுடன் சேர்க்காமல் - தன்னிசையாக செயல்பட அனுமதிக்க வேண்டும்’
ஊராட்சிகளை நகராட்சிகளுடன் சேர்க்காமல் - தன்னிசையாக செயல்பட அனுமதிக்க வேண்டும்’
ஊராட்சிகளை நகராட்சிகளுடன் சேர்க்காமல் - தன்னிசையாக செயல்பட அனுமதிக்க வேண்டும்’ பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளை நகராட்சிகளுடன் சேர்க்காமல் தன்னிசையாக செயல்பட அனுமதிக்க வேண்டும்' என, பவானிசாகர் எம்.எல்.ஏ., அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பவானிசாகர் எம்.எல்.ஏ.,பண்ணாரி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - அமைச்சருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதா வது: ஈரோடு மாவட்டம் - பவானிசாகர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட புன் - செய்புளியம்பட்டி நகராட்சியுடன், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நொச்சிக்குட்டை, மாதம்பாளையம், நல்லூர் ஆகிய ஊராட்சி பகுதிக ளையும், சத்தியமங்கலம் நகராட்சியுடன், சத்தியமங் கலம் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட கொமாரபா ளையம் ஊராட்சியையும் சேர்க்க திட்டம் வகுக்கப் பட்டு முன்னறிவிப்பு வெளி யிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பின் தங்கிய ஏழை எளிய மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர். மேற்கண்ட இந்த ஊராட்சி பகுதிகளை நகராட்சிகளுடன் சேர்த்தால் பொதுமக்களின் வாழ்வ தாரம் மிகவும் பாதிக்கப் படும். மேலும் சொத்து வரி, குடிநீர் வரி, வீடு கட்டுமான வரைபட அனுமதி உள்ளிட்ட வரிகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். இப்பகுதியில் தொழிற்சாலைகள் ஏதும் இல்லாததால் மானாவாரி விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். மேற்கண்ட வஊராட்சி களை நகராட்சிகளுடன் சேர்க்காமல் ஏற்கனவே செயல்பட்ட ஊராட்சிகளாக தன்னிச்சையாக செயல்பட ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
Next Story