மகாத்மா காந்தி பிறந்த நாள். தீபாவளி கதர் விற்பனையை துவக்கி வைத்தார் ஆட்சியர் தங்கவேல்.
Karur King 24x7 |2 Oct 2024 6:16 AM GMT
மகாத்மா காந்தி பிறந்த நாள். தீபாவளி கதர் விற்பனையை துவக்கி வைத்தார் ஆட்சியர் தங்கவேல்.
மகாத்மா காந்தி பிறந்த நாள். தீபாவளி கதர் விற்பனையை துவக்கி வைத்தார் ஆட்சியர் தங்கவேல். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணி மலை பகுதியில் செயல்படும் காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் விற்பனையை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். விற்பனை துவக்கி வைக்க வந்த மாவட்ட ஆட்சியருக்கு காதி கிராப் உதவி இயக்குனர் சீனிவாசன் பொன்னாடை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காந்தியடிகள் திருவுருவப்படத்தை திறந்து வைத்து, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி, குத்துவிளக்கு ஏற்றி வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ஒரு சேலை மற்றும் சர்ட் ஆகிய இரண்டையும் ரூபாய் 1500 கொடுத்து பெற்றுக் கொண்டார். கடந்தாண்டு தீபாவளி சிறப்பு விற்பனையாக 92 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட இந்த காதி கிராப்ட்ல், நடப்பாண்டிற்கு 176- லட்சம் மதிப்புள்ள கதர், பாலிஸ்டர், பட்டு மற்றும் உள்ளன் ரகங்களை விற்பனை செய்திட வாரியத்தால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கதர் பாலிஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதமும் குறிப்பிட்ட ரகங்களுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story