பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக நகரும் நிழற்குடை அமைப்பு
Bhavanisagar King 24x7 |2 Oct 2024 6:16 AM GMT
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக நகரும் நிழற்குடை அமைப்பு
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக நகரும் நிழற்குடை அமைப்பு சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் பிரசித்தி பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி, அரசு விடுமுறை நாட்கள், முகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்கள் ஆகிய நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வணங்கி செல்வார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் குண்டம் பகுதிக்கு சென்று அங்குள்ள சாம்பலை நெற்றியில் விபூதியாக பூசி செல்வது உண்டு. பக்தர்கள் குண்டம் அமைக்கப்படும் இடத்துக்கு செல்வதற்கு வசதியாக பேவர் பிளாக் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. கோடை காலத்தில் இந்த பேவர் பிளாக் பகுதி அதிக அளவில் சூடாகி விடுவதால் பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டதின் பேரில் பக்தர்கள் சிலர் நகரும் நிழற்குடைகளை நன்கொ டையாக வழங்கி உள்ளனர். குண்டம் பகுதியில் பக்தர்கள் சிரமம் இன்றி செல்வதற்கு வசதியாக அந்த நகரும் நிழற்குடைகள் வைக்கப்பட்டு உள்ளது. நகரும் நிழற்குடை வழியாக பக்தர்கள் குண்டம் பகுதிக்கு சிரமம் இன்றி சென்று வழிபட்டு வருகிறார்கள்.
Next Story