பொய்யாமணி ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம்
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் பொய்யாமணி ஊராட்சி சார்பில் காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம் அக்ரஹாரம் பகுதியில் இன்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பால தண்டாயுதம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் புனிதா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு 20 தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் லெனின் பழனி வாசித்தார். இந்த ஊராட்சியில் 100% பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story