ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்!
ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த கோரி திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடை பயணம்! அண்ணல் மகாத்மா காந்தி அடிகளின் பிறந்தநாள் விழாவை காங்கிரஸ் கட்சியினர் ஜெயந்தி விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத நல்லிணக்கத்தை போற்றுவோம் என்றும் மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த கோரி நடை பயணம் மாநகர் மாவட்ட தலைவர்.கிருஷ்ணன் தலைமையில் ரயில் நிலையம் முன்பு இருந்து துவங்கி நடைபெற்றது. முன்னதாக ரயில் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணல் காந்தியடிகள் அவர்களின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற நடைபெற்ற நடை பயணத்தில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story



