கம்மவான்பேட்டையில் காந்தி ஜெயந்தி விழா விளையாட்டு
Arani King 24x7 |2 Oct 2024 12:15 PM GMT
ஆரணி.அக்.2 கம்மவான்பேட்டை கிராமத்தில் நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இந்தியாவிலேயே கம்மவான்பேட்டை கிராமத்தில் அதிக அளவில் ராணுவ வீரர்கள் நிறைந்துள்ளனர். இங்குள்ள இளைஞர்களின் தேசப்பற்றை வளர்க்கும் வகையில் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசளிப்பது வழக்கம். இதன்படி, நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி ஓட்டப்பந்தயம் நடந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள் சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்திலிருந்து சக்திமலை முருகன் கோயில் உச்சிவரை 5கிலோ மீட்டர் தூரம் இளைஞர்கள் உற்சாகத்துடன் ஓடினார்கள். இதில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர் எல்.ஏழுமலை பரிசுகள் வழங்கி பாராட்டினார். அப்போது, இராணுவத்தில் சேர இந்த பயிற்சி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். தேசத்தின் மீதான உங்கள் நாட்டுபற்று உங்களை வெற்றி பாதையில் அழைத்து செல்லும் என கூறினார். நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
Next Story