குமாரபாளையம் போலீசாருக்கு டி.ஜி.பி. விருது
Komarapalayam King 24x7 |2 Oct 2024 12:20 PM GMT
குமாரபாளையம் போலீசாரை டி.ஜி.பி. விருது வழங்கி பாராட்டினார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீசாரை டி.ஜி.பி. விருது வழங்கி பாராட்டினார். ஏ.டி.எம் கொள்ளையர்களை என்கவுண்டர் செய்த குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜுவால் இவர்கள் இருவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். இதனை தொடர்ந்து மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடந்த அணிவகுப்பு மரியாதையை டி.ஜி.பி. ஏற்றுக்கொண்டார். செப். 27ல் குமாரபாளையத்தை அடுத்த வெப்படையில் ஏ.டி.எம் கொள்ளையர்களை என்கவுண்டர் செய்த சம்பவத்தில் ஈடுபட்ட 23 பேரை பாராட்டி, டி.ஜி.பி. சங்கர் ஜுவால் வெகுமதி மற்றும் விருது வழங்கி பாராட்டினார். நாமக்கல் கலெக்டர் உமா, மேற்கு மண்டல காவல் துறை தலைவர் செந்தில்குமார், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் உமா, நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். விருது பெற்ற குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ. ராம்குமார், ஏட்டுக்கள் மதியழகன், அங்கமுத்து, ரவீந்திரன், ராஜா ஆகியோரை எஸ்.ஐ.க்கள், எஸ்.எஸ்.ஐ.க்கள், ஏட்டுக்கள், போலீசார், மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள், தன்னார்வலர்கள் பாராட்டினர்.
Next Story