ஏ.டி.எம் கொள்ளையர்களை பிடிக்கச் சென்று காயம் அடைந்த காவலர்களை நேரடியாக சென்று பாராட்டு மற்றும் ஆறுதலை கூறிய காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால்.

கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை பிடிக்க துரிதமாக செயல்பட்ட நாமக்கல் மாவட்ட காவல்துறையினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், நேரில் சந்தித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையினை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், , மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் டி.செந்தில்குமார், சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் ஈ.எஸ்.உமா, ஆகியோர் முன்னிலையில் கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை பிடிக்க துரிதமாக செயல்பட்டு சிறப்பாக பணிபுரிந்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையினை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு 27.09.2024-ம் தேதி திருச்சூர் மாவட்ட காவல்துறையிடம் இருந்து ஏ.டி.எம் கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகள் வெள்ளை நிற கிரிட்டா கார் மற்றும் ராஜஸ்தான் அல்லது ஹரியானா மாநில பதிவு கொண்ட கண்டெய்னர் லாரியில் வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அந்த வாகனத்தை காவல்துறையினர் பின்தொடர்ந்து விரட்டி சென்றபோது, மேற்கூரிய வாகனமானது சங்ககிரி, சங்ககிரி ரவுண்டானா, வெப்படை 4 ரோடு வழியாக அதிவேகமாக சென்று சாலையில் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றின் மீது மோதியது. பொதுமக்களின் உயிருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேமாக சென்ற அந்த வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற ஆய்வாளர், சன்னியாசிபட்டி அருகே தடுத்து நிறுத்தினார். குமாரபாளையம் காவல் ஆய்வாளர் மற்றும் மல்லசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் தப்பி சென்ற இருவரையும் பின்னால் துரத்தி சென்று பிடிக்க முற்பட்ட போது தப்பி செல்ல முயன்றவர்களை சரணடைய எச்சரிக்க விடுத்துள்ளார்கள். காவல்துறையினர் தன்னை தற்காத்து கொள்ளவும், உதவி ஆய்வாளரின் உயிரை காப்பாற்றவும், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். இதில் ஒரு கொள்ளையார் துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். மேற்படி சம்பவத்தில் காயமுற்ற காவல் ஆய்வாளர் திரு.தவமணி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.ரஞ்சித்குமார் ஆகிய இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அதனைத்தொடர்ந்து, இன்று இன்று சிகிச்சை பெற்று வரும் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோரை தமிழ்நாடு காவல்றை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், நேரடியாக சென்று சந்தித்து நலம் விசாரித்து, அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்கள்.
Next Story