நடைப்பயணத்தை தடுத்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டை கண்டித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும்

நடைப்பயணத்தை தடுத்த விருத்தாசலம் துணை போலீஸ்  சூப்பிரண்டை கண்டித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும்
எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டும் கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து விருத்தாச்சலத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து நடை பயணமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த முறையும் கடந்த 12 நாட்களுக்கு முன்பு நேரில் கூறியதுடன் நகர தலைவர் ரஞ்சித் குமார் மூலமாக அனுமதி கேட்டு விருத்தாச்சலம் காவல் துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டது. இந்த நடைபயணம் தமிழ்நாடு முழுவதும் நடந்தால் எங்களுக்கு பிரச்சனை இல்லை என விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி தெரிவித்தார். ஆனால் இன்று திடீரென வந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கிறார். 138 ஆண்டுகள் ஆன இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்ற தந்த காங்கிரஸ் கட்சி ஒரு அகிம்சை வழியில் நடைபயணமாக சென்று சிலைகளுக்கு மாலையிட கூட அனுமதி மறுத்தால் ஜனநாயகத்திற்கே கேள்விக்குறியாக உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் தலைமையில் நடந்த நடை பயணத்திற்கும் இதுபோல விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமதி மறுத்தார். ஆனால் அவரது தலைமையில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அமைதியான முறையில் நடைபயணம் நடைபெற்றது. ஆனால் விருத்தாசலத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அன்றும் நாங்கள் போராடி 200 மீட்டர் அளவிற்கு நடை பயணம் சென்றோம். ஆனால் இன்று கடலூர் சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் நடந்தது. அங்கெல்லாம் எந்த பிரச்சினையும் இல்லை. குறிப்பாக விருத்தாசலத்தில் மட்டும் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியாசக்தி பொறுப்பேற்றதில் இருந்து இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊர்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. ஆனால் மது பாட்டில்கள் விற்காத ஊரே கிடையாது. இது இவர்களுக்கு தெரியாதா? ஏன் இதனை இவர்கள் தடுக்கவில்லை. இன்று கஞ்சா விற்பனை இல்லாத ஊரே கிடையாது. அனைத்து ஊர்களிலும் விற்கப்படுகிறது. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதா? இதனை இந்த போலீஸ் தடுக்க கூடாது? அதற்கு மட்டும் அனுமதி உண்டு. நடை பயணத்திற்கு அனுமதி கிடையாதா? இதற்கு முதலில் தீர்வு காண வேண்டும். இதனை நான் கேட்டால், நான் எஃப் ஐ ஆர் பதிவு செய்தேன். எஃப் ஐ ஆர் பதிவு செய்தால் தேர்தலில் நிற்க முடியாது தெரியுமா என டிஎஸ்பி கேள்வி கேட்கிறார். டிஎஸ்பி எங்களை மிரட்டுகிறாரா என தெரியவில்லை. திட்டமிட்டு காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகளை தடுக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியை அழிக்க வேண்டும் என்பதற்காகவே டிஎஸ்பி இது போன்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். இல்லையென்றால் இதுபோன்றுதான் நடத்த வேண்டும் என ஒரு வரைமுறைகளை அனைத்து கட்சிகளுக்கும் டிஎஸ்பி வழங்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை மட்டும் தடுக்கக்கூடாது. உரிய தீர்வை ஏற்படுத்தாவிட்டால் விருத்தாசலம் டிஎஸ்பி மற்றும் போலீசாரை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும். காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் தெரிவிக்கப்படும் என்றார்.
Next Story