பையூர் ஊராட்சியில் கிராம சபா கூட்டம்.

X
ஆரணி அடுத்த பையூர் ஊராட்சியில் காந்திஜெயந்தி முன்னி்ட்டு புதன்கிழமை கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஊராட்சி த் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேந்திரன், வார்டு உறுப்பினர்கள் பாஸ்கரன், பூபாலன், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஊராட்சி செயலாளர் வெ திருமலை 21 தீர்மானம் வாசித்தார். உதவி பொறியாளர் ஜெயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இ்க்கூட்டத்தில் பையூர் ஊராட்சியை ஆரணி நகராட்சியுடன் இணைக்க போவதாக தகவல் வருகிறது ஆகையால் பையூர் ஊராட்சியை ஆரணி நகராட்சியுடன் இணைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஊராட்சித் தலைவர் சரவணனிடம் பையூர் அதிமுக நிர்வாகி சதீஷ் கோரிக்கை மனு கொடுத்தார்.
Next Story

