மனநலம் பாதித்த மூதாட்டி குவாரி பள்ளத்தில் தவறி விழுந்து பலி!

மனநலம் பாதித்த மூதாட்டி குவாரி பள்ளத்தில் தவறி விழுந்து பலி!
விபத்து செய்திகள்
ஆணைப்பட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள் (70) இவர் 2 வருடங்களாக சற்று மனநிலை பாதித்து அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இந்த நிலையில் இன்று முத்தம்மாள் பரம்பூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான குவாரி பள்ளத்தில் இறந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதியினர் அன்னவாசல் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story