கள்ளக்குறிச்சி பகுதியில் மகாளய அமாவாசை

X
கள்ளக்குறிச்சி பகுதியில் மகாளய அமாவாசையையொட்டி, இறந்த முன்னோர்களுக்கு ஏராளமானோர் திதிகொடுத்தனர்.இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் சிறப்பு பெற்ற மகாளய அமாவாசை தினம் நேற்று நடந்தது. அதனையொட்டி, புண்ணிய நதிகள், கடற்கரை மற்றும் அந்தந்த பகுதி கோவில்களிலும் புனித நீராடி, முன்னோருக்கு திதி கொடுப்பது வழக்கம். அதன்படி நேற்று கள்ளக்குறிச்சி பகுதியில் சிதம்பரேஸ்வரர் கோவில், தில்லை கோவிந்தராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வரிசையில் நின்று தங்கள்முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
Next Story

