குட்டை போல தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் அவதி!
Thoothukudi King 24x7 |3 Oct 2024 5:49 AM GMT
கோவில்பட்டி அருகே கழிவு நீர் தேங்கியுள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில்பட்டி அருகே கழிவு நீர் தேங்கியுள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஜமீன் தேவர்குளம். கிராமம் வடக்கு தெரு பகுதியில் சிலர் சாலை, புறம்போக்கு இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்துள்ள காரணத்தினால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல முடியாமல் கடந்த சில மாதங்களாக குட்டை போல் தேங்கி இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கழிவு நீர் தேங்கி இருப்பதால் அந்த தெரு வழியாக மக்கள், நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. அதிகமாக துர்நாற்றம் வீசி வருவது மட்டுமின்றி, கொசு தொல்லையும் அதிகரித்திருப்பதாகவும், குழந்தைகளுக்கு பல விதமான தொற்று நோய்கள் பரவி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி வாறுகால் அமைத்து கழிவு நீரை வெளியேற்ற வேண்டும் என்று தொடர்ந்து மனு கொடுத்து வருவதாகவும், ஆனால் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
Next Story