திருப்பூர் மாநகராட்சியில் கட்டிடங்களை மறு அளவீடு செய்து வரி விதிப்பதை நிறுத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனரிடம் அதிமுக எம்எல்ஏக்கள் மனு!
Tiruppur (North) King 24x7 |3 Oct 2024 11:34 AM GMT
திருப்பூர் மாநகராட்சியில் கட்டிடங்களை மறு அளவீடு செய்து வரி விதிப்பதை நிறுத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனரிடம் அதிமுக எம் எல் ஏ க்கள் மனு அளித்தனர்.
திருப்பூர் மாநகராட்சியில் கட்டிடங்களை மறு அளவீடு செய்து வரி விதிப்பதை நிறுத்த வேண்டும் கமிஷனரிடம், அதிமுக எம்எல்ஏக்கள் மனு திருப்பூர், அக். 4: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன் குமாரிடம், அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், விஜயக்குமார் மற்றும் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் பலர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகராட்சியில் ஏற்கனவே 150 சதவீத வரி உயர்வை அமல்படுத்தியிருக்கின்ற சூழ்நிலையில் மீண்டும் கட்டடங்களை மறு அளவீடு செய்து வரி உயர்வு ஏற்படுத்தி மக்களின் வரிச்சுமையை அதிகரிக்க செய்யும் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருவதாக தெரிகிறது. உடனடியாக மேற்கண்ட மறு அளவீடு செய்வதை நிறுத்தி மக்கள் ஏற்கனவே வரி உயர்வால் விழிபிதுங்கி நிற்கும் போது வரி உயர்வினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் உள்ள சூழ்நிலையில் சொத்துவரி, பிளானிங் அப்ரூவல் (கட்டட அனுமதி) 450 சதவீதம் உயர்வு,பாதாளச் சாக்கடை வரி, பாதாள சாக்கடை வைப்புத்தொகை, குப்பை வரி போன்ற வரிகளை குறைத்து, திருப்பூர் மாநகர மக்களின் வரிச்சுமையை குறைக்க உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து திருப்பூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். சொத்து வரி, கட்டட வரி, தொழில் வரிகள் என அனைத்து வரிகளையும் ஒவ்வொரு ஆண்டும், ஆண்டுக்கு 6 சதவிகிதம் வரி உயர்த்தியும், மேலும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் வரி செலுத்த தவறினால் அதற்கு 1 சதவிகிதம் அபராத தொகை வசூலிக்கப்படும் என்ற புதிய அரசாணை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 6 சதவிகிதம் உயர்த்திய அனைத்து வரிகளையும் ரத்து செய்து, 1 சதவிகித அபராத தொகைகளையும் ரத்து செய்து பொது மக்களின் வாழ்வாதாரத்தையும், திருப்பூர் தொழில் துறையினரின் நலனையும் பாதுகாத்திட வேண்டும். மேலும், திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தம் பெற்றுள்ள நிர்வாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இ எஸ் ஐ, வருங்கால வைப்பு நிதி முறையாகப் பிடித்தம் செய்து மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் கிடைக்கக்கூடிய சலுகைகளையும், பலன்களையும் தொழிலாளர்களுக்கும் கிடைத்திட உடனடியாக ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story