தெரு நாய்களை கட்டுப்படுத்த காங்கேயம் நகராட்சி நடவடிக்கை - விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

காங்கேயம் நகராட்சி தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை 20 நாய்களைப் பிடித்துச் சென்ற தனியார் அமைப்பு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஆடுகளை தாக்கி கொன்று வந்த வெறிநாய்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 1 மாதத்தில் மிகவும் அதிகரிக்கவே  பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.இதனால் கலக்கமடைந்த மாவட்ட நிர்வாகம் அந்தந்த ஊராட்சி,பேரூராட்சி,நகராட்சி நிர்வாகமே நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்ததை தொடர்ந்து நேற்று முதல் நாய்களை பிடித்து கருத்தடை செய்து விடுவதனே சுமார் 20 நாய்கள் பிடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காங்கேயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதுடன் விவசாயிகள் வளர்ந்து வரும் கோழி, ஆடு மற்றும் மாட்டுக் கன்று குட்டிகளை கடித்துக் கொண்டு விடுகின்றது. இதில் கடந்த சில மாதங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம்,ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் புகார் மனு கொடுத்தும் இறந்தாடுகளை சாலையில் போட்டு பல்வேறு கட்ட போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கலக்கம் அடைந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி இருந்தனர். மேலும் யாரும் உரிமை கோராத நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. மேலும் இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. கடந்த வாரத்தில் இரண்டு சிறுவர்களையும்  நாய்கள் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனால் காங்கேயம் நகராட்சி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க திருப்பூர் தனியார் அமைப்பான தங்கம் ட்ரஸ்ட் உதவியுடன் காங்கேயம் பேருந்து நிலையம்,சந்தை வளாகம்,திருப்பூர் ரோடு,மார்க்கெட் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்கும் பணிகளை தனியார் அமைப்பு உதவியுடன் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 20க்கும் மேற்பட்ட  பிடித்து திருப்பூரில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மையத்திற்கு கொண்டு சென்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்து 6 முதல் 10 நாட்களுக்குள் மீண்டும் பிடித்த இடத்தில் திருப்பி அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த வரம் முழுவதும் இப்பணிகள் நடைபெறும் என காங்கேயம் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை பொதுமக்கள் பத்திரமாக வீட்டிலேயே கட்டி வைத்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.    கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நாய்களால் பிரச்சனை ஏற்படும் என்ற ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்ட பின் தற்போது மாவட்டம் முழுவதும் ஒரே ஒரு தனியார் அமைப்பின் உதவியுடன் ஊராட்சி,பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் நாய்களை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு நாய்களை பிடித்து கருத்தடை செய்த பின் மீண்டும் அதே இடத்தில் விடுவதால் நாய்களால் ஆடுகள் பலியாவது கட்டுப்படுத்த முடியமா என்ற கேள்வி விவசாயிகளிடம் எழுந்துள்ளது. மேலும் நாய்கள் பிடிக்கப்படுவது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்றே சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Next Story