ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
Andippatti King 24x7 |3 Oct 2024 3:13 PM GMT
ரோடு வசதி, சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தியும் பொதுமக்கள்,இளைஞர்கள் பயன்படுத்தும் நூலகத்தை நவீன படுத்தி தரம் மிக்க நூல்களை வாங்கி படிக்க உதவி செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றம்
ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது தேனி மாவட்டம ஆண்டிபட்டி தாலூகாவில் கண்டமனூர் கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கடமலை மயிலை ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் தேனி மாவட்ட செயலாளர் M.சிவக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைசெயலாளர் M.அய்யனார் அவர்கள் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் S.மணிகண்டன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இந்த செயல் வீரர் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. 1. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமை காக்க சென்னை கோட்டையை நோக்கி அக்டோபர் 16ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் கண்டன பேரணியில் பெருந்திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு பேரணியை வெற்றிகரமாக நடத்திட தீர்மானிக்கப்பட்டது. 2. தேவேந்திரகுல வேளாளர்கள், ஆதிதிராவிட மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் அருந்ததியினர் 3% உள்இட ஒதுக்கீடை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3. கண்டமனூர் ஊராட்சியில் ரோடு வசதி, சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தியும் பொதுமக்கள்,இளைஞர்கள் பயன்படுத்தும் நூலகத்தை நவீன படுத்தி தரம் மிக்க நூல்களை வாங்கி படிக்க உதவி செய்ய வேண்டும் இதற்கு ஊராட்சி செயலாளர் தக்க நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஒன்றிய செயல்வீரர் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் ராமையா, சங்கிலி ஆதாஷ், மணி, வீரசின்னு, ரஞ்சித், குமார், ஊர்நாட்டமை வேலு பெண்கள், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
Next Story